Connect with us

சினிமா

நடிகை தன்ஷிகாவை கைது செய்ய பிரியாவின் கோரிக்கை..!சர்ச்சைக்கு நடிகையின் கடும் பதில்..

Published

on

Loading

நடிகை தன்ஷிகாவை கைது செய்ய பிரியாவின் கோரிக்கை..!சர்ச்சைக்கு நடிகையின் கடும் பதில்..

தமிழில் பேராண்மை, பரதேசி, கபாலி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் தான் நடிகை சாய் தன்ஷிகா தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கிலும் நடித்து வருகிறார்.தற்போது, தன்ஷிகா தொடர்பான சர்ச்சையான புகார் ஒன்றை அவரது முன்னாள் மேனேஜர் பிரியா ட்விட்டரில் கூறியுள்ளார். பிரியாவின் குற்றச்சாட்டுப்படி, தன்ஷிகா மற்றும் இசையமைப்பாளர் அம்ரிஷ் மனைவி கீர்த்தி அனுஷா ஆகியோர் பணம் மற்றும் சொத்து உள்ளவர்களை குறிவைத்து மிரட்டுவதாக தெரிவித்துள்ளார்.மேலும், பிரியா தனது பெற்றோரை மிரட்டியதாகக் கூறி, தன்ஷிகாவை கைது செய்ய வேண்டும் என தொடர்ந்து ட்விட்டரில் பதிவு செய்து வருகிறார்.இந்த புகாருக்கு பதிலளித்த தன்ஷிகா, 2019 ஆம் ஆண்டிலேயே பிரியாவை மேனேஜராக இருந்து நீக்கியதாகவும், பிரியா குறிப்பிட்ட நபர்கள் யாரென்று கூட தனக்குத் தெரியாது என விளக்கம் அளித்துள்ளார்.அத்துடன், பிரியா தொடர்ந்து தவறான குற்றச்சாட்டுகளை வெளியிட்டால், சட்டத்தை நாடி நடவடிக்கை எடுக்கவும் தயங்கமாட்டேன் என நடிகை தன்ஷிகா எச்சரித்துள்ளார்.இந்த விவகாரம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,தற்போது இது எப்படி முடிவிற்கு வரும் என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன