Connect with us

உலகம்

நடுவர் வழங்கிய சர்ச்சை முடிவு: ரசிகர்களின் மோதலில் 100 பேர் உயிரிழப்பு!

Published

on

Loading

நடுவர் வழங்கிய சர்ச்சை முடிவு: ரசிகர்களின் மோதலில் 100 பேர் உயிரிழப்பு!

கென்யா நாட்டின் என்சரிகோர் நகரிலுள்ள மைதானமொன்றில் இடம்பெற்ற காற்பந்து போட்டியில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 100 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

நடுவரினால் சர்ச்சையான தீர்ப்பு வழங்கப்பட்டது எனக் கூறி இரசிகர்களில் ஒரு தரப்பினர் கோபமடைந்து தகராறில் ஈடுபட்டனர்.

Advertisement

இதனைத் தொடர்ந்து இன்னொரு தரப்பினரும் மைதானத்துக்குள் நுழைந்து ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

இம் மோதல் வன்முறையாக மாறி மைதானத்துக்கு வெளியிலும் வீதிகளிலும் இரசிகர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதுடன், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கும் தீ வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த மோதல் சம்பவத்தில் 100 இற்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன