நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 03/12/2024 | Edited on 03/12/2024

புஷ்பா முதல் பாகத்தின் வெற்றிக்குப் பிறகு சுகுமார் – அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘புஷ்பா 2 தி ரூல்’. மைத்ரி முவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும், ஃபஹத் ஃபாசில் வில்லனாகவும் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இப்படம் வருகிற டிசம்பர் 5ஆம் வெளியாகவுள்ள நிலையில் சென்னை, ஹைதராபாத், கொச்சி, மும்பை என பல்வேறு பகுதிகளில் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடந்தது. படத்திற்கான டிக்கெட் முன்பதிவு சமீபத்தில் தொடங்கி முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த நிலையில் சமீபகாலமாக இப்படத்தில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் விலகியுள்ளதாகக் கூறப்பட்டது. அதாவது படத்தின் பின்னணி இசையை தேவி ஸ்ரீ பிரசாத் அமைக்கவில்லை என்றும் அவருக்கு பதில் சாம் சி.எஸ் மற்றும் தமன் இசையமைத்து வருவதாகவும் சொல்லப்பட்டது. 

Advertisement

இதனைத் தொடர்ந்து தற்போது சாம் சி.எஸ் இப்படத்திற்கு பின்னணி இசை அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் புஷ்பா 2 எனக்கு ஒரு பெரும் பயணம் என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டு படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். 


<!–
–>

<!–உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

–>

Advertisement