Connect with us

இலங்கை

மட்டக்களப்பில் மணல் அகழ்விற்கு தற்காலிக தடை விதிப்பு!

Published

on

Loading

மட்டக்களப்பில் மணல் அகழ்விற்கு தற்காலிக தடை விதிப்பு!

மட்டக்களப்பு – செங்கலடி பகுதிக்கான மணல் அகழ்வு அனுமதிப் பத்திரங்களை தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, மாவட்ட செயலக மண்டபத்தில் நேற்றையதினம் அனர்த்த முகாமைத்துவ  குழு கூட்டம் இடம்பெற்றது.

Advertisement

மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் அதிகமானோர் ஈடுபடுவதனால் வயல் நிலங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும்

இதன்காரணமாகவே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது  தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் கருத்து தெரிவிக்கையில், 

Advertisement

இனிவரும் காலங்களில் அபிவிருத்தியானது மக்கள் நலன்சார்ந்த அபிவிருத்தியாக இருக்க வேண்டுமே தவிர எந்தவகையிலும் அன்றாட வாழ்க்கைக்கு பாதகங்களை ஏற்படுத்தகூடிய அபிவிருத்தியாக இருக்கமுடியாது.

சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாக பேசப்பட்டுள்ளது. இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்னர் நடவடிக்கை எடுக்க கோரியிருந்தாலும் சில அதிகாரிகள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்ற விமர்சனமும் பரவலாக முன்வைக்கப்பட்டுள்ளது.

எனவே உயர் அதிகாரிகளை கொண்டு தீர்க்கமான நடவடிக்கை எடுத்துள்ளோம். எதிர்வரும் காலங்களிலும் விதிமுறைக்கு முரணாக மண் அகழ்வுகள் இடம்பெறுமாயின் இது தொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்குமாறு கேட்டுள்ளோம்.

Advertisement

இந்த அனர்த்தங்கள் மூலமாக கூட சரியான பாடங்களை கற்றுக்கொள்ளாவிட்டால் அது ஒரு பரவலான பாதிப்புக்கு வழியமைக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை என்றார்.[ஒ]

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன