இலங்கை
யாழில் பாம்பு தீண்டியவர் மரணம்

யாழில் பாம்பு தீண்டியவர் மரணம்
யாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் வடமராட்சி நெல்லியடி பகுதியைச் சேர்ந்த ஓய்வு நிலை சிறிலங்கா ரெலிங்கொம் உத்தியோகத்தர் இளையதம்பி சிவகுமார் (வயது 66) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை உடுப்பிட்டி பகுதியில் உள்ள தோட்டத்தில் தனது மாட்டினை மேய்ச்சலுக்காக கட்டிய போது அவரை பாம்பு தீண்டியது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு (2) உயிரிழந்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.