தொழில்நுட்பம்
10 நாளில் 2-வது சம்பவம்; கூகுள் மேப்ஸை நம்பி கால்வாயில் கவிழ்ந்த கார்; நல்வாய்ப்பாக உயிர் தப்பிய 3 பேர்

10 நாளில் 2-வது சம்பவம்; கூகுள் மேப்ஸை நம்பி கால்வாயில் கவிழ்ந்த கார்; நல்வாய்ப்பாக உயிர் தப்பிய 3 பேர்
உத்தரப் பிரதேசத்தில் கூகுள் மேப்ஸ் சொல்லும் வழிகளைப் பின்பற்றி காரில் 3 பேர் சென்ற போது சாலை இல்லாத பகுதியில் சென்று அங்கிருந்த கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக காரில் இருந்த மூவரும் உயிர் தப்பினர்.பரேலி-பிலிபித் மாநில நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அவுரையா என்ற பகுதியைச் சேர்ந்த திவ்யான்ஷு சிங் என்பவர் மற்ற இருவர் செடான் காரில் பயணம் செய்துள்ளனர். சாலை அரிப்பு காரணமாக கைவிடப்பட்ட சாலையில் பர்காபூர் கிராம சந்திப்பில் காலாபூர் கால்வாய் அருகே கார் கவிழ்ந்தது. காரில் இருந்த 3 பேரும் காயமின்றி உயிர் தப்பினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர், கிரேன் மூலம் வாகனத்தை மீட்டனர்.விபத்து நடந்த சில நிமிடங்களில் எங்கள் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை. அவர்களது கார் கிரேன் உதவியுடன் கால்வாயில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் கூகுள் மேப்ஸைப் பயன்படுத்தி பிலிபிட் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்” என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.முன்னதாக, நவம்பர் 24 அன்று பரேலியில் இது போன்று கூகுள் மேப்ஸ் வழிகாட்டப்பட்ட பாதையில் சென்று கட்டிமுடிக்கப்படாத மேம்பாலத்திலிருந்து 3 பேர் விழுந்து உயிரிழந்தனர்.