Connect with us

சினிமா

3 நாள் வாய திறக்கவே கூடாது.. கங்குவா எதிரொலி, அதிரடி காட்டும் தயாரிப்பாளர் சங்கம்

Published

on

Loading

3 நாள் வாய திறக்கவே கூடாது.. கங்குவா எதிரொலி, அதிரடி காட்டும் தயாரிப்பாளர் சங்கம்

நடிப்பில் இயக்கியிருந்த படம் வெளி வருவதற்கு முன்பு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்தது. அதற்கேற்றார் போல் தயாரிப்பாளரில் தொடங்கி பட குழுவினர் அனைவரும் ஏகப்பட்ட பில்டப் கொடுத்தனர்.

ஆனால் படம் வெளிவந்த பிறகு கடும் நெகட்டிவ் விமர்சனங்களை சந்திக்க தொடங்கியது. படத்தை பார்த்தவர்கள் பலரும் மோசமான ரிவ்யூ கொடுத்த நிலையில் படம் வசூலில் பெரும் அடி வாங்கியது.

Advertisement

இதற்கு சோசியல் மீடியாக்கள் தான் காரணம் என படத்திற்கு ஆதரவாக திரையுலகில் பலரும் குரல் கொடுத்தனர். படத்தைப் பார்த்த ஆடியன்ஸ் விமர்சனம் என்ற பெயரில் சில வன்மத்தையும் இறக்குகின்றனர். அதனால் இதை தடுக்க வேண்டும் என பலரும் பேசி வந்தனர்.

அதேபோல் திருப்பூர் சுப்ரமணியம் திரையரங்கில் யூடியூப் சேனல்கள் ரசிகர்களிடம் கருத்து கேட்பதை தடை செய்ய வேண்டும் என கூறியிருந்தார். அதனால் திரையரங்கு உரிமையாளர்கள் யூடியூப் சேனல்களை அனுமதிக்கவில்லை.

அதையடுத்து இப்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளனர். அதில் கூறி இருப்பதாவது ஒரு படம் வெளியாகி மூன்று நாட்களுக்குப் பிறகுதான் சோசியல் மீடியாக்களில் விமர்சனங்கள் வரவேண்டும்.

Advertisement

அதுவரை இன்ஸ்டாகிராம் ஃபேஸ் புக் டிவிட்டர் போன்ற தளங்களில் யாரும் கருத்து தெரிவிக்க கூடாது. இதற்கு தடை விதிக்க வேண்டும். மத்திய மாநில அரசுகளும் இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன