Connect with us

இந்தியா

Annamalai | 2026 சட்டப்பேரவை தேர்தல் பாஜகவுக்கு வாழ்வா, சாவா போராட்டம்… அண்ணாமலை பரபரப்பு பேச்சு

Published

on

Annamalai | 2026 சட்டப்பேரவை தேர்தல் பாஜகவுக்கு வாழ்வா, சாவா போராட்டம்... அண்ணாமலை பரபரப்பு பேச்சு

Loading

Annamalai | 2026 சட்டப்பேரவை தேர்தல் பாஜகவுக்கு வாழ்வா, சாவா போராட்டம்… அண்ணாமலை பரபரப்பு பேச்சு

Advertisement

தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், சர்வதேச அரசியல் புத்தாக்கப் படிப்பிற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி லண்டன் சென்றார். மூன்று மாதம் படிப்பு முடிந்து டிச.1-ம் தேதி தமிழ்நாடு  திரும்பிய நிலையில், தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது அண்ணாமலை ஆலோசனை கூட்டத்தில் பேசுகையில், தமிழ்நாட்டில் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இன்னும் உறுப்பினர் சேர்க்கை நடந்துகொண்டிருக்கிறது. அதே போல தமிழகம் முழுவதும் கட்சியின் கிளை அளவில் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது.” என்றார்.

மேலும் வருகிற 2026 தேர்தல் நமக்கு வாழ்வா, சாவா தேர்தல் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மக்கள் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். எனவே, தேர்தல் வெற்றிக்கு நிர்வாகிகள், தொண்டர்கள் களத்தில் இறங்கி கடுமையாக பணியாற்ற வேண்டும்.” எனப் பேசினார்.

Advertisement

தமிழ்நாட்டில் புயல் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் களத்தில் இறங்கி உதவிட வேண்டும் எனவும் அவர் கோட்டுக்கொண்டார்.

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தொடர்பான வழக்கில் அவருக்கு ஆதரவாக கட்சி துணை நிற்கும் எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன