இந்தியா
Free Driving Class: 8 ம் வகுப்பு தகுதி போதும்…இலவசமாக டிரைவிங் கத்துக்கலாம்..!!

Free Driving Class: 8 ம் வகுப்பு தகுதி போதும்…இலவசமாக டிரைவிங் கத்துக்கலாம்..!!
Free Driving Class
தமிழ்நாடு அரசுநான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவசமாக கார் ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 45 நாள் இலகுரக வாகனம், கனரக வாகனம் மற்றும் 30 நாள் போர்க்லிப்ட் ஆப்பரேட்டர் ஆகியவற்றில் இலவச பயிற்சி பெறலாம்.
எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் இந்த திட்டத்தின் கீழ் கார் ஓட்டுநர் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.எதிர்காலத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச அளவில் வாகன ஓட்டுனர் வேலை வாய்ப்புகளை பெற இந்த பயிற்சி பெரிதும் உதவிகரமாக இருக்கும் என நம்பப்படுகிறது. தகுதியுள்ள பயனாளிகள் தமிழ்நாடு அரசின் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இளங்கலை படிப்பை முடித்த 21 வயது முதல் 24 வயது வரையிலான இளைஞர்கள் தமிழ்நாட்டின் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று தரும் விதமாக 12 மாதம் இன்டர்ன்ஷிப் வாய்ப்பையும் தமிழ்நாடு அரசு வழங்குகிறது. இதற்காக மாதம் தோறும் ஐந்தாயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
இதற்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பாலிடெக்னிக், ஐடிஐ, டிப்ளமோ, ஏதேனும் துறைகளில் பட்டம் பெற்று இருந்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆண்டு வருமானம் ரூபாய் 8 லட்சத்திற்கு மேல் இருக்கக் கூடாது. இந்த திட்டங்கள் குறித்து மேலும் அறிந்து கொள்ள என்ற இணையதளத்தில் பார்வையிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது.