Connect with us

சினிமா

அமரன் படத்தின் ஓ.டி.டி. வெளியீட்டிற்கு தடை..!மன உளைச்சலுக்காக இழப்பீடு கோரும் வழக்கு

Published

on

Loading

அமரன் படத்தின் ஓ.டி.டி. வெளியீட்டிற்கு தடை..!மன உளைச்சலுக்காக இழப்பீடு கோரும் வழக்கு

அமரன் படத்தில் தனது அனுமதியின்றி செல்போன் எண் பயன்படுத்தப்பட்டதனால், மன உளைச்சலுக்கு உள்ளாகி ரூ. 1.10 கோடி இழப்பீடு தரவேண்டும் என்று கோரியுள்ளார் ஒரு இளைஞர். சென்னையைச் சேர்ந்த வாகீசன் என்ற என்ஜினியரிங் மாணவரே இந்த குற்றச்சாட்டை முன்வைத்து, சட்டநடவடிக்கை எடுத்து உள்ளார்.வாகீசனின் வக்கீலின் மூலம் பட தயாரிப்பு நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட நோட்டீஸில், அமரன் படத்தில் இழந்த தனிமனித உரிமையினால் அவர் அவமானம் மற்றும் மன உளைச்சலுக்கு உள்ளாகியதாக கூறியுள்ளார். இதன் விளைவாக அவர் பெரிய அளவில் மனரீதியாக பாதிக்கப்பட்டதாகவும், இழப்பீடாக ரூ.1.10 கோடி செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.அமரன் படம் நாளை ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ள நிலையில், வாகீசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டை தடை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.படத்தின் தயாரிப்பு குழு இதுகுறித்து இன்னும் பதில் அளிக்கவில்லை. ஆனால், இப்படத்திற்கு எதிரான இந்நடவடிக்கை படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ள நிலையில், மன்றத்தின் முடிவு என்னவாகும் என்பதற்கு அனைத்து தரப்பும் ஆர்வமாக காத்திருக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன