உலகம்
உலகின் மிகப்பெரிய பணக்காரனாகும் சிறுவன்!

உலகின் மிகப்பெரிய பணக்காரனாகும் சிறுவன்!
உலகின் மிகப்பெரிய பணக்காரர சிறுவனாக நடிகர் ஐயாயின் அர்மிடேஜ் மாறியுள்ளார்.
ஐயாயின் அர்மிடேஜ் கடந்த 2008ம் ஆண்டு ஜார்ஜியாவில் பிறந்தார். ஐயாயின் அர்மிடேஜ் தனது 6 வயதில் யூடியூப் சேனல் தொடங்கி, அதன் மூலம் புகழ் பெற்றவர். 2014ம் ஆண்டு இயன் லவ்ஸ் தியேட்டர் தொடரில் நடித்த இவர் அதன் மூலம், வெப் தொடர்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. பின்னர், 2017ம் ஆண்டு தி கிளாஸ் கேஸில், எவர் சோல்ஸ் அட் நைட், மற்றும் ஐ அம் நாட் ஹியர் ஆகிய மூன்று திரைப்படங்களில் நடித்தார்.
இதையடுத்து, டிவி நிகழ்ச்சிகளிலும் நடிக்க தொடங்கினார். 2017ம் ஆண்டே, தி பிக் பேங் தியரியின் ஸ்பின்ஆஃப் யங் ஷெல்டனில் அவர் நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
தனது 9 வயதில் ப்ரைம் டைம் டிவி நிகழ்ச்சியை வழிநடத்தும் சிறுவர்களில் ஒருவர் ஐயாயின் அர்மிடேஜ்.
அடுத்த ஏழு ஆண்டுகளில், ஜிம் பார்சன்ஸ் மூலம் முதலில் பிரபலமான பாத்திரத்தில் இயன் நடித்தார். இந்நிலையில், ஐயாயின் அர்மிடேஜ் தனது ஒரு டிவி நிகழ்ச்சிக்கு வருமானமாக ரூ. 25,37,028 பெறுவதாக தெரிவித்துள்ளார். தனது டிவி நிகழ்ச்சியில் முழு சிகனுக்கு ரூ. 4.6 கோடி சம்பாதிப்பதாக கூறியுள்ளார். இந்நிலையில், அவரின் சொத்து மதிப்பு ரூ.50 கோடி என தெரிவித்தார். மேலும், ஐயாயின் அர்மிடேஜ் உலகின் மிக பெரிய பணக்காரர் சிறுவர் என கூறப்படுகிறது.