இலங்கை
ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட அரசாங்க கொள்கை அறிக்கை

ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட அரசாங்க கொள்கை அறிக்கை
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்க கொள்கை அறிக்கை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஜனாதிபதியினால் நவம்பர் 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்க கொள்கை அறிக்கை மீதான தீர்மானம் இன்று பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அரசாங்க கொள்கை அறிக்கை மீதான விவாதம் நேற்று காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் இன்று காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும் இரண்டு நாள் விவாதமாக நடைபெற்றது.