இந்தியா
கார்த்திகை தீபம் 2024: வீட்டில் அகல் விளக்கு ஏற்ற உகந்த நேரம் இதுதான் – டைம் நோட் பண்ணுங்க…

கார்த்திகை தீபம் 2024: வீட்டில் அகல் விளக்கு ஏற்ற உகந்த நேரம் இதுதான் – டைம் நோட் பண்ணுங்க…
கார்த்திகை தீபம் 2024: வீட்டில் விளக்கு ஏற்ற உகந்த நேரம்
கார்த்திகை தீபம் 2024 – வீட்டில் கார்த்திகை தீபம் ஏற்ற உகந்த நேரம் இதுதான்…
இறைவனை தீப சொரூபத்தில் வழிபடும் மாதம் தான் இந்த கார்த்திகை மாதம். கார்த்திகை மாதத்தில் சிவபெருமானை வழிபாடு செய்வது மிக சிறந்த பலன்களை தரும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. மாதந்தோறும் சுப தினங்கள் பண்டிகை நாட்கள் வருகிறது, அதேபோல் தான் கார்த்திகை மாதம் என்றாலே கார்த்திகை தீப விழா.
இந்த கார்த்திகை மாதம் சிவபெருமானை வழிபாடு செய்து அவருடைய அருளை பெற உகந்த மாதமாகும். அதேபோல் கார்த்திகை தீபம் மேலும் ஒரு சிறப்பாகும். அந்த வகையில் இந்த வருடத்தின் கார்த்திகை தீபம் எப்போது வருகிறது, அதன் சிறப்புகள் என்ன, அன்றைய தினம் வீட்டில் விளக்கேற்ற நல்ல நேரம் எது என்று விளக்குகிறார். புதுக்கோட்டை மாவட்ட கோவில் அர்ச்சகர் பாலாஜி.
ஈசன் பஞ்சபூதத்தினால் ஆனவர் அதில் மிகவும் சக்தி வாய்ந்தது நெருப்பு எனும் தீப சொரூபம். அந்த வகையில் கார்த்திகை மாதத்தில் சிவபெருமானை தீபத்தில் வழிபாடு செய்வதால் வீட்டில் செல்வங்கள் யாவும் பெருகி வளர செய்யும். அனைத்து அஷ்டலட்சுமிகளும் நமது வீட்டில் வந்து அனைத்து கஷ்டங்களையும் போக்க செய்வர். அதாவது தீபம் ஏற்றியவுடன் மேல் நோக்கி தீப ஒளி செல்வது போல் வாழ்விலும் நன்மைகள் பெருகி மேல் நோக்கி செல்லும் என்றும் கோவில் குருக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வருடத்தின் திருக்கார்த்திகை தீபம் டிசம்பர் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, கார்த்திகை மாதம் 28 ஆம் தேதி வருகிறது. கார்த்திகை தீபத் திருநாள் அன்று அதிகாலையில் பெண்கள் அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று பசுமையினால் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதால் வீட்டில் உள்ள பாவ தோஷங்கள் அனைத்தும் நீங்கும் அத்துடன் பித்ரு தோஷங்களும் நீங்கி மென்மேலும் வளர செய்யும்.
பொதுவாகவே வீட்டில் மாலையில் ஐந்து முதல் ஆறு மணிக்குள் விளக்கு ஏற்ற வேண்டும். இந்த கார்த்திகை தீபத்தன்று அண்ணாமலையில் தீபம் ஏற்றும் பொழுது வீட்டிலும் விளக்கேற்றுவது நன்மையை தரும். விளக்கு ஏற்றும் போது 27 விளக்கு, 54 விளக்கு என்ற எண்ணிக்கையில் ஏற்றலாம் என்று அவர் தெரிவித்தார்.