உலகம்
குயின்ஸ்லாந்து கடற்கரையில் 2.3 தொன் போதைப்பொருள் மீட்பு!

குயின்ஸ்லாந்து கடற்கரையில் 2.3 தொன் போதைப்பொருள் மீட்பு!
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து கடற்கரையில் பழுதடைந்த படகு ஒன்றில் இருந்து 2.3 தொன் அளவிலான போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் இரு சிறுவர்கள் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு குயின்ஸ்லாந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி நாலாயிரம் கோடிக்கு மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது.