இந்தியா
“குறைந்தது 3 குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்…” – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அட்வைஸ்

“குறைந்தது 3 குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்…” – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அட்வைஸ்
நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “இந்தியாவில் மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்து வருவது கவலைக்குரிய விஷயம். ஒவ்வொரு குடும்பமும் சமூகத்தின் ஓர் அங்கம். சமூகத்தின் வளர்ச்சிக்கு குடும்பங்களின் பங்கு அவசியம். மக்கள் தொகை குறைந்து வருவதால் பல மொழி, கலாச்சாரமும் ஏற்கனவே அழிந்து விட்டன. ஏனெனில் எந்த ஒரு குழுவில் பிறப்பு விகிதம் குறைவாக இருக்கிறதோ அந்த குழு நாளடைவில் அழிந்துவிடும் ” என்றார்.
மேலும் “இந்த அழிவு வெளியில் இருந்து வராது என்றும், எந்த ஒரு பேரழிவையும் சந்திக்காமல் அது தானாக நடந்துவிடும் என்றும் அது கூறுகிறது” என்று அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசுகையில், “1998 அல்லது 2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நமது நாட்டின் மக்கள் தொகை கொள்கையில், எந்த ஒரு சமூகத்தின் மக்கள் தொகையும் 2.1 சதவிகிதத்திற்கு கீழ் குறையக் கூடாது. அதாவது குடும்பத்திற்கு 3 குழந்தைகளாவது இருக்க வேண்டியது அவசியம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
“எனவே மக்கள் தொகை சதவிகிதம் 2.1-க்கு கீழ் குறையக் கூடாது எனவும் குறைவு ஏற்பட்டால் 3 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்” எனவும் மோகன் பகவத் கேட்டுக்கொண்டார்.