பொழுதுபோக்கு
சூர்யா நடிக்கும் அடுத்த படம்: 19 ஆண்டுக்கு பின் ஜோடியாகும் த்ரிஷா; வைரல் அப்டேட்!

சூர்யா நடிக்கும் அடுத்த படம்: 19 ஆண்டுக்கு பின் ஜோடியாகும் த்ரிஷா; வைரல் அப்டேட்!
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிக்க உள்ள சூர்யா 45 படத்தின் பட பூஜை சமீபத்தில் கோவையில் நடந்த நிலையில், தற்போது இந்த படத்தில் நடிகை த்ரிஷா நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் சூர்யா – த்ரிஷா கூட்டணியில் உருவாகும் 4-வது படம் இதுவாகும்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா நடிப்பில் 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு கங்குவா திரைப்படம் வெளியானது. சூர்யா நடிப்பில் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் நவம்பர் 14-ந் தேதி வெளியாகி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வசூலில் பெரும் சறுக்கலை சந்தித்தது. ஆனாலும் சூர்யா தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா தனது 44-வது படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், அடுத்து தனது 45-வது படமாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ள நிலையில், த்ரிஷா இந்த படத்தில் நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.2019-ம் ஆண்டு வெளியாக எல்.கே.ஜி படத்தின் மூலம் கதாசிரியராக மாறிய ஆர்.ஜே.பாலாஜி, அதன்பிறகு மூக்குத்தி அம்மன் என்ற பெரிய வெற்றிப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், ஆர்.ஜே.பாலாஜி தற்போது சூர்யா நடிக்க உள்ள 45-வது படத்தை இயக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார்.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.அருவா அதிகமாக இருக்க நடுவில் குதிரை ஒன்று இருப்பது போலவும், வேல்கம்பும் படத்தில் உள்ளதால், இது வரலாற்று படமாக இருக்குமா என்ற கேள்வியும் எழுந்த நிலையில், கடந்த வாரம், தற்போது சூர்யா 45 படத்தன் பட பூஜை கோவை மாசானி அம்மன் கோவிலில் நடந்துள்ளது. இதனிடையே, சூர்யா 45 படத்தில் நாயகியாக நடிக்க நடிகை த்ரிஷா கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மௌனம் பேசியதே படத்தின் மூலம் முதல் முறையாக சூர்யா – த்ரிஷா இணைந்து நடித்திருந்தனர். அதன்பிறகு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஆயுத எழுத்து படத்தில் சூர்யா –த்ரிஷா இணைந்து நடித்திருந்தாலும், இருவரும் ஜோடியாக நடிக்கவில்லை. அதன்பிறகு ஹரி இயக்கத்தில் ஆறு என்ற படத்தில் இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர். தற்போது 19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இருவரும் இணைந்துள்ளனர். “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“