இலங்கை
ஜனாதிபதி அநுரவுக்கும் தமிழரசுக் கட்சி எம்.பிக்களுக்கு இடையே முக்கிய சந்திப்பு!

ஜனாதிபதி அநுரவுக்கும் தமிழரசுக் கட்சி எம்.பிக்களுக்கு இடையே முக்கிய சந்திப்பு!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு இன்றையதினம் (04-12-2024) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
குறித்த சந்திப்பின் போது, இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் நீண்ட காலமாக வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் முகம்கொடுத்து வரும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் விளக்கமளித்தனர்.