Connect with us

இந்தியா

டெல்லி – காஷ்மீர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் எப்போது தொடங்கப்படுகிறது…? ரயில்வே துறை இணை அமைச்சர் ரவிநாத் சிங் விளக்கம்…

Published

on

டெல்லி - காஷ்மீர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் எப்போது தொடங்கப்படுகிறது...? ரயில்வே துறை இணை அமைச்சர் ரவிநாத் சிங் விளக்கம்...

Loading

டெல்லி – காஷ்மீர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் எப்போது தொடங்கப்படுகிறது…? ரயில்வே துறை இணை அமைச்சர் ரவிநாத் சிங் விளக்கம்…

Advertisement

சிறப்பு என்னவென்றால், இந்த ரயில் உலகின் மிக உயரமான மற்றும் அழகான இடமான செனாப் பாலத்தின் வழியாக செல்லும். இந்த பாலம் அதன் கட்டுமான உயரத்தால் ஒரு சிறப்பு ஈர்ப்பாக இருக்கும். மேலும் இந்த ரயில் பாதையானது பயணிகளை மேலும் உற்சாகப்படுத்தும். மொத்தமுள்ள 272 கிமீ USBRL ரயில் திட்டத்தில் ஏற்கனவே 255 கிமீ ரயில் பாதையை நிறைவு செய்துள்ளது. கத்ரா மற்றும் ரேசாய் இடையேயான மீதமுள்ள 17 கிலோமீட்டர் பாதை டிசம்பர் முதல் வாரத்தில் முடிக்கப்படும் என்றும், ரயிலின் சோதனை ஓட்டமானது டிசம்பர் 2வது வாரத்தில் இருந்து தொடங்கும் என்றும் ரயில்வே அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குளிர் காலத்தில் ஜம்மு காஷ்மீரில் பல சாலைகள் மூடப்படும். இதன் காரணமாக, காஷ்மீர் இணைப்புகள் முற்றிலும் பாதிக்கப்படும். இந்த நேரத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் பிற சாலைகள் மூடப்படும்போது, இந்த திட்டமானது பள்ளத்தாக்கு மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் ஜம்முவில் நிற்கும். இது மட்டுமின்றி, மாதா வைஷ்ணோ தேவி கோவில் அருகே உள்ள ரயில் நிலையத்திலும் நிறுத்தப்படும்.

இதனால் இந்த கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கும் இந்த ரயில் சேவை உதவும். டெல்லி முதல் காஷ்மீர் வரையிலான விலை ரூ.1,500 முதல் ரூ.2,100 வரை நிர்ணயிக்கப்படும் என்றும் ரயில்வே அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெல்லி – காஷ்மீர் வந்தே பாரத் விரைவு வண்டியில் 11 ஏசி 3 அடுக்குப் பெட்டிகள், நான்கு ஏசி 2 அடுக்கு பெட்டிகள் மற்றும் ஒரு முதல் ஏசி கோச் இருக்கும்.

Advertisement

“இது ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும், இந்தியர்களுக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அளித்த பரிசு. இதனால் சுற்றுலா, வர்த்தகம் மற்றும் சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் ஜம்மு காஷ்மீருக்கு இந்த ரயில் உதவும்” என்றும் ரவனீத் சிங் கூறியுள்ளார். இந்த திட்டத்தின் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ரவிநாத் சிங், இந்த திட்டத்தில் கடுமையான பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதனால் பயணம் முற்றிலும் பாதுகாப்பானது என்றும் கூறியுள்ளார். இந்த ரயில் இணைப்பு முடிந்த பிறகு, காஷ்மீர் பகுதியில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் சிறந்த போக்குவரத்து வசதிகளைப் பெறுவார்கள்.

காஷ்மீர்-டெல்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலானது பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான படியாக இருக்கும். இந்த ரயில் சேவை காஷ்மீர் பள்ளத்தாக்கின் உள்ளூர்வாசிகளுக்கு சிறந்த இணைப்பு மற்றும் விரைவான போக்குவரத்து வசதிகள் போன்ற பல நன்மைகளை வழங்கும். இது தவிர, இந்த இணைப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் சுற்றுலாவை மேம்படுத்தும். ஏனெனில் இப்போது சுற்றுலாப் பயணிகள் டெல்லியிலிருந்து காஷ்மீருக்கு எளிதாகச் செல்ல முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன