Connect with us

இந்தியா

“பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது” – சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்

Published

on

“பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது” - சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்

Loading

“பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது” – சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்

Advertisement

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ் தலங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பது தொடர்பான வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரதசக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், உலக நாடுகளில் பிளாஸ்டிக்குகளை குப்பைத் தொட்டியில் போடுகின்றனர். ஆனால் நாம் தான் அவற்றை வெளியில் வீசிவிடுகிறோம் என்று தெரிவித்தனர்.

Advertisement

மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஓரங்களில் இருந்து டன் கணக்கில் பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்கலாம் என தெரிவித்த நீதிபதிகள், இனிவரும் காலங்களில் பேரிடர்களுக்கு இயற்கையை குறை கூற முடியாது என்றும், அவற்றுக்கு நாமே காரணம் என்றும் வேதனை தெரிவித்தனர்.

உரிமைகளைப் பற்றி பேசும் மக்கள் தங்கள் கடமைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று ஆதங்கம் தெரிவித்த நீதிபதிகள் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன