Connect with us

இந்தியா

பொற்கோயிலில் பயங்கரம்: முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் மீது துப்பாக்கிச் சூடு

Published

on

Gunfire

Loading

பொற்கோயிலில் பயங்கரம்: முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் மீது துப்பாக்கிச் சூடு

ஷிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) தலைவர் சுக்பீர் சிங் பாதல் மீது இன்று காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. முன்னாள் துணை முதல்வராக பதவி வகித்த இவர், தண்டனையின் அடிப்படையில் பொற்கோயிலுக்கு வெளியே காவலாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலத்தில் படிக்கவும்: Man fires shots at Sukhbir Badal as he stands guard outside Golden Temple பாதல் மற்றும் பிற மூத்த அகாலி தலைவர்கள் சீக்கிய சமூகத்தை வழிநடத்த தகுதியற்றவர்கள் என்று கூறி அகல் தக்த் ஜதேதார் கியானி ரக்பீர் சிங் இந்த தண்டனையை விதித்திருந்தார்.தண்டனையின் ஒரு பகுதியாக, சுக்பீர் பாதல் மற்றும் 2015 ஆம் ஆண்டு கேபினட் அமைச்சர்கள் உட்பட அகாலி தளத்தின் மையக் குழு உறுப்பினர்கள், கழிவறைகளை சுத்தம் செய்யவும், சமையலறையில் பணியாற்றவும், தினசரி சீக்கிய பிரார்த்தனை செய்யவும் உத்தரவிடப்பட்டது. தண்டனையின் அடிப்படையில் அவர்கள் கழுத்தில் பலகைகள் தொடங்விடப்பட்டிருந்தன.உடல்நலக் குறைவின் காரணமாக, சுக்பீர் பாதல் மற்றும் சுக்தேவ் சிங் திண்ட்சா ஆகியோர் குருவின் இல்லத்தில் இரண்டு நாள்களுக்கு வாயில் காப்பாளர்களாகப் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன