உலகம்
போல்டிக் கடலில் டேட்டா கேபள்கள் துண்டிப்பு: விசாரணைகள் ஆரம்பம்!

போல்டிக் கடலில் டேட்டா கேபள்கள் துண்டிப்பு: விசாரணைகள் ஆரம்பம்!
போல்டிக் கடலுக்கு அடியில் செல்லும் இரண்டு டேட்டா கேபள்களை துண்டித்துள்ளமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பின்லாந்து, சுவீடன், ஜேர்மன் நாடுகளது அதிகாரிகள் இது தொடர்பிலான விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.
இது தொடர்பில் தெரிவிக்கப்படுவதாவது, ேபால்டிக் கடலுக்கு அடியில் செல்லும் இரண்டு டேட்டா கேபள்கள் சில தினங்களுக்கு முன் துண்டிக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒரு கேபள் பின்லாந்து மற்றும் ஜேர்மனிக்கும் மற்றைய கேபள் லித்துவேனியாவுக்கும் சுவீடனுக்கும் செல்லக்கூடியாகும்.
‘இந்த கேபள்கள் அறுந்த நிலையில் காணப்பட்ட பகுதியில் சீனாவுக்கு சொந்தமான கப்பல் காணப்பட்டதாகவும் அக்கப்பலை கண்காணித்து வருவதாகவும் டேனிஷ் இராணுவ பேச்சாளர் ஹென்ரிக் ஹால் மோர்டென்சன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான், இக்கப்பல் சம்பவம் தொடர்பில் தங்களுக்கு எதுவித தகவலும் கிடைக்கப்பெறவில்லை. ஆனால் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தொடர்புகளைப் பேணத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.