தொழில்நுட்பம்
ப்ரோபா-3 விண்கலத்தில் திடீர் கோளாறு: பி.எஸ்.எல்.வி-சி59 ராக்கெட் ஏவுதல் ஒத்திவைப்பு

ப்ரோபா-3 விண்கலத்தில் திடீர் கோளாறு: பி.எஸ்.எல்.வி-சி59 ராக்கெட் ஏவுதல் ஒத்திவைப்பு
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியால் வடிவமைக்கப்பட்ட ப்ரோபா-3 விண்கலத்தை இன்று (டிச.4) விண்ணில் செலுத்தப்பட இருந்த நிலையில் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஏவுதல் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று டிசம்பர் 4, 2024 மாலை 4:06 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ராக்கெட் ஏவப்பட இருந்த நிலையில் ஏவுதல் நாளை டிசம்பர் 5, வியாழன் மாலை 4:12 மணிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. Due to an anomaly detected in PROBA-3 spacecraft PSLV-C59/PROBA-3 launch rescheduled to tomorrow at 16:12 hours.ப்ரோபா-3 ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியால் தயாரிக்கப்பட்ட செயற்கைக்கோள் ஆகும். இதில் 2 செயற்கைக்கோள்கள் உள்ளன. சூரியனின் வளிமண்டலத்தின் வெளிப்புற அடுக்கான சூரிய கரோனாவை ஆய்வு செய்வதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. கொரோனாகிராஃப் ஸ்பேஸ் கிராஃப்ட் (சிஎஸ்சி) மற்றும் அக்குல்டர் ஸ்பேஸ்கிராஃப்ட் (ஓஎஸ்சி) என 2 செயற்கைக்கோள்கள் உள்ளன. ப்ரோபா-3 விண்கலத்தில் எந்த மாதிரியான தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது என்பதை இஸ்ரோ தெளிவுபடுத்தவில்லை.