இந்தியா
ரயில் பயணிகளே உஷார்.. செங்கோட்டை, குருவாயூா் ரயில்களின் வழித்தடத்தில் மாற்றம்..!!

ரயில் பயணிகளே உஷார்.. செங்கோட்டை, குருவாயூா் ரயில்களின் வழித்தடத்தில் மாற்றம்..!!
வழித்தடங்கள் மாற்றம்
மணப்பாறை அருகேயுள்ள பூங்குடி ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் நடைபெற இருப்பதால் செங்கோட்டை – மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) டிசம்பா் 5, 7, 19, 20, 21, 23, 26, 27, 30, ஜனவரி 3, 6, 8 ஆகிய தேதிகளில் கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து, விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மட்டும் இயக்கப்படும்.
நாகா்கோவில் – மும்பை சிஎஸ்டி விரைவு ரயிலானது (16352) டிசம்பா் 19, 26 ஆம் தேதிகளில் மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக இயக்கப்படும். கன்னியாகுமரி – ஹவுரா விரைவு ரயிலானது (12666) டிச. 21-ஆம் தேதி மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து, விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக இயக்கப்படும்.
குருவாயூா் – சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (16128) டிச. 20, 25, ஜன. 2, 5 ஆம்தேதிகளில் மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து, விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக இயக்கப்படும். மதுரை – பிக்கானோ் விரைவு ரயிலானது (22631) வரும் 26 ஆம் தேதி மதுரையிலிருந்து 2.05 மணி நேரம் தாமதமாக அதாவது, பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் எனரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.