டி.வி
லட்சுமி தொடரில் மாற்றம்..!சஞ்சீவ் வெங்கட் கதாபாத்திரத்திற்கு பதில் இனி இவர் தானா..?

லட்சுமி தொடரில் மாற்றம்..!சஞ்சீவ் வெங்கட் கதாபாத்திரத்திற்கு பதில் இனி இவர் தானா..?
பிரபல ஜோடி சஞ்சீவ் வெங்கட் மற்றும் ஸ்ருதிராஜ் இணைந்து நடித்துவரும் குடும்ப நாடகமான லட்சுமி தொடரில் முக்கிய மாற்றம் நிகழவுள்ளது. கடந்த மார்ச் 2024 முதல் தொடங்கிய இந்த தொடர், 100 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்து, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.பாலசேகரன் எழுதிய இந்தக் கதை ஒரு பெண்ணின் வாழ்க்கைச் சவால்களையும் வெற்றிகளையும் மையமாக கொண்டது. ஆனால் தற்போது, தொடரின் முக்கிய வேடமான நாயகன் சஞ்சீவ் வெங்கட், தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சஞ்சீவின் இடத்தை இனி மகராசி சீரியல் மூலம் பிரபலமான ஆர்யன் நிரப்பவிருக்கிறார். இந்த மாற்றம் தொடரின் கதைக்களத்தில் எந்தவித மாற்றங்களை ஏற்படுத்தும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.தொடரின் தயாரிப்பு குழு இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்தவித அறிவிப்பையும் வெளியிடாதபோதிலும், இந்த மாற்றம் புதிய திருப்பங்களை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.