இந்தியா
வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த முட்டை கொள்முதல் விலை! – எவ்வளவு தெரியுமா?

வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த முட்டை கொள்முதல் விலை! – எவ்வளவு தெரியுமா?
நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு, நாள்தோறும் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலையை நிர்ணயித்து வருகிறது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு, இதுவரை இல்லாத வகையில், 5 ரூபாய் 90 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது. உற்பத்தி குறைவு, மற்ற மண்டலங்களில் முட்டை விலை உயர்ந்தது, அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிய காரணங்களால் விலை உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், வடமாநிலங்களில் நிலவும் குளிர்காரணமாக முட்டை நுகர்வு அதிகரித்துள்ளதும் காரணமாக கூறப்படுகிறது. இந்த விலை மேலும் உயரும் என்று கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். சில்லறை விற்பனையில் 6 ரூபாய்க்கு மேல் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே, பிராய்லர் கோழி கொள்முதல் விலையை, உயிருடன் கிலோ 104 ரூபாயாகவும், முட்டைக்கோழி விலையை கிலோ 94 ரூபாயாகவும் தென்னிந்திய கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.