உலகம்
ஹொங்கொங்கின் விஷேட சுங்க அந்தஸ்தை நீக்க வலியுறுத்து!

ஹொங்கொங்கின் விஷேட சுங்க அந்தஸ்தை நீக்க வலியுறுத்து!
ஹொங்கொங்கின் விஷேட சுங்க அந்தஸ்தை இரத்து செய்யுமாறு ஐரோப்பிய பாராளுமன்றம் வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய யூனியனிடம் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹொங்கொங்கின் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 45 பேருக்கு நான்கு முதல் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமைக்கு ஆட்சேபனை தெரிவித்தே ஐரோப்பிய பாராளுமன்றம் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளது.
அதேநேரம், ஹொங்கொங்கின் பிரதம நிறைவேற்று தலைவர் உட்பட அரசியல் தலைவர்களுக்கு தடைவிதிக்க வேண்டுமென ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும் கோரப்பட்டுள்ளன. இந்நிலையில் அமெரிக்கா ஹொங்காங்கின் சிறப்பு அந்தஸ்தை 2020 இல் இரத்து செய்தமை குறிப்பிடத்தக்கது .