இலங்கை
இடைக்கால நியமக் கணக்கு இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது!

இடைக்கால நியமக் கணக்கு இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது!
2025 ஆம் ஆண்டின் முதல் 04 மாதங்களுக்கான அரச செயற்பாடுகள் மற்றும் கடன் சேவைகளை தொடர்வதற்கான இடைக்கால நியமக் கணக்கு இன்று (05) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவினால் இடைக்கால நியமக் கணக்கை சமர்ப்பிக்கவுள்ளதோடு இது தொடர்பான விவாதம் இன்றும் நாளையும் (06) நடைபெறவுள்ளது.
அடுத்த ஆண்டு முதல் 4 மாதங்களுக்கு அரசின் திட்டங்களை செயற்படுத்த தேவையான நிதி இந்த இடைக்கால நிலையான கணக்கு மூலம் ஒதுக்கப்படும்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட இடைக்கால நியமக் கணக்கை தயாரிப்பதற்கான பொருத்தமான பிரேரணைக்கு நவம்பர் 25ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.