Connect with us

சினிமா

இப்படியொரு தேவதைய மிஸ் பண்ணிட்டீங்களே.! சமந்தாவின் இன்ஸ்டா போட்டோ வைரல்

Published

on

Loading

இப்படியொரு தேவதைய மிஸ் பண்ணிட்டீங்களே.! சமந்தாவின் இன்ஸ்டா போட்டோ வைரல்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் பிரபலமான ஒரு நடிகையாக திகழ்ந்து வருகின்றார்.2017 ஆம் ஆண்டு பிரபல நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பலருக்கும் பிடித்த காதல் ஜோடியாக இந்த ஜோடி திகழ்ந்து வந்தது. ஆனால் சுமூகமாக சென்ற இவர்களுடைய திருமண வாழ்க்கையில் திடீரென விரிசல் ஏற்பட்டது.இதை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு இருவரும் மனப்பூர்வமான சம்மதத்துடன் சட்டபூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். அதன் பின்பு சமந்தா தனது கேரியரில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றார். ஆனாலும் நாக சைதன்யா சமந்தாவை பிரிந்த சிறிது நாட்களிலேயே பிரபல நடிகை உடன் பழக ஆரம்பித்தார்.d_i_aஅதன்படி சோபிதா துலிபாலாவுடன் காதலில் விழுந்தார் நாக சைதன்யா. நீண்ட காலமாக இவர்கள் ரகசியமாக காதலித்து வந்தார்கள். அதன் பின்பு இருவருக்கும் நாக சைதன்யாவின் தந்தையான நாகார்ஜுனா தலைமையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதை தொடர்ந்து இவர்களுடைய திருமணமும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது.இந்த நிலையில், நடிகை சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது அழகிய புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். மேலும் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் நாக சைதன்யா சோபிதாவின் திருமண  வீடியோக்களையும் பகிர்ந்து உள்ளார்.தற்போது சமந்தாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு லட்சணமாக இருக்கின்றார் என்று தமது கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றார்கள். அத்துடன் சமந்தா ஒரு கம்பீரமான பெண்  என்றும் கூறி வருகின்றார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன