Connect with us

சினிமா

கங்குவாவும் இதனாலதான் ஓடல, இப்படி மோசடி செஞ்சா படம் ஓடுமா? விளாசிய பிரபல தயாரிப்பாளர்

Published

on

Loading

கங்குவாவும் இதனாலதான் ஓடல, இப்படி மோசடி செஞ்சா படம் ஓடுமா? விளாசிய பிரபல தயாரிப்பாளர்

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் படங்கள் எல்லாம் தோல்வியைத் தழுவி வருகின்றன. அவர், பைனான்சியர்களிடம் செய்யும் தவறுதான் இதற்குக் காரணம் என தயாரிப்பாளார் மாணிக்கம் நாராயணன் பேட்டியளித்தார்.

மிஸ்டர் லோக்கல், தங்கலான் படங்களை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்தார். இவை கலவையான விமர்சனங்கள் பெற்றன.

Advertisement

சூர்யா நடிப்பில், சிவா இயக்கத்தில் ஞானவேல்ராஜா தயாரிப்பில் நவம்பர் 14 ஆம் தேதி ரிலீஸான படம் கங்குவா. இப்படமும் கலவையான விமர்சனங்கள் பெற்றது.

இப்படத்தை ரசிகர்கள் ட்ரோல் செய்தனர். 2000 கோடி வசூலித்து சாதனை படைக்கும் என படக்குழு எதிர்பார்த்திருந்தது. நெகட்டிவ் விமர்சனம் வந்தன. இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்தது.

ஒரு பேட்டியில் மாணிக்கம் நாராயணன், ஞானவேல் ராஜா தயாரிக்கும் படங்கள் தோல்வியடைய காரணம் பலரது சாபம் என்று தெரிவித்தார்.

Advertisement

மேலும், பைனான்சியர் ஒருத்தரிடம் 7 கோடி கடன் வாங்கினார். அந்தக் கடனை திருப்பித் தராமல் வழக்குப் போட்டி 1 கோடி தான் தரமுடியும் என என ஏமாற்றினால் படம் எப்படி ஓடும்? கங்குவா வெளியாகும் முன்பே ஞானவேல்ராஜா மீது பல வழக்குகள், கடன் உள்ளன எனக் கூறினார்.

சூர்யாவின் சில்லுனு ஒரு காதல் படம் முதல் கங்குவா வரை பல படங்கள் தயாரித்துள்ளது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்.

ஆரம்பத்தில் பல ஹிட்டுகள் கொடுத்தது. இடையில், தொடங்கிய சறுக்கல், கடைசியில் வெளியான கங்குவா வரை நீடிக்கிறது என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

Advertisement

ஏற்கனவே, ஞானவேல் ராஜா தயாரித்து, அமீர் இயக்கிய பருத்தி வீரன் படத்திற்கு அவருக்கு சம்பளம் தரவில்லை. இதுகுறித்து அமீர் அறிக்கை வெளியிட்டார். ஞானவேல் ராஜா பேட்டியளித்ததும் சர்ச்சையானது.

அமீருக்கு ஆதரவாக சுதா கொங்கரா, சசிகுமார், சமுத்திரகனி ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர். இது சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது ஞானவேல் ராஜா மீது மாணிகம் நாராயணனன் விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன