Connect with us

சினிமா

கடல் பாறையில் நடிகை யோகா.. காதலன் கண்முன்னே நடந்த சோகம்: திக் திக் கடைசி நிமிடம்!

Published

on

கடல் பாறையில் நடிகை யோகா.. காதலன் கண்முன்னே நடந்த சோகம்: திக் திக் கடைசி நிமிடம்!

Loading

கடல் பாறையில் நடிகை யோகா.. காதலன் கண்முன்னே நடந்த சோகம்: திக் திக் கடைசி நிமிடம்!

Advertisement

ரஷ்ய நாட்டின் பிரபல நடிகை கமிலா பெல்யாட்ஸ்காயா. 24 வயதான இவர் தன் காதலனுடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். அங்குள்ள கோ சாமுய் கடற்கரையில் அலைகளை ரசிப்பதற்காக லாட்-கோ வியூபாயின்ட்டுக்கு சென்றவர், சிறிது நேரம் யோகா செய்வதற்கு முயன்றிருக்கிறார். பாறைகள் நிறைந்த கடற்கரையில் அவர் ஒரு பெரிய பாறை மீது அமர்ந்து யோகா செய்துள்ளார். அதை அங்கிருந்த சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ எடுத்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக ராட்சத அலை ஒன்று அடித்து, நடிகை கமிலா பெல்யாட்ஸ்காயாவை கடலுக்குள் இழுத்துச் சென்றது. அங்கு வீடியோ எடுத்துக்கொண்டிருந்த நபர், நடிகையை காப்பாற்ற முயன்றும் முடியாமல் போனது.

உடனே இது தொடர்பாக மீட்புப் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 15 நிமிடங்களில் மீட்புக் குழுக்கள் வந்தும் கடுமையான கடல் கொந்தளிப்பு காரணமாக அவரைக் காப்பாற்ற முடியாமல் போனது.

Advertisement

பின்னர் நீண்ட தேடுதலில் சில கி.மீ தூரத்தில் நடிகை கமிலா பெல்யாட்ஸ்காயாவின் உடலை சடலமாக மீட்டனர். ரஷ்ய நடிகை கமிலா தாய்லாந்தின் கோ சாமுய் கடற்கரையை மிகவும் நேசித்துள்ளார்.

தனது பதிவுகளில் “பூமியில் சிறந்த இடம்” எனக் கூறி, அடிக்கடி இங்கே வந்து நேரம் செலவிட்டு வந்துள்ளார். ரஷ்ய நடிகை கமிலா பெல்யாட்ஸ்காயா தான் மிகவும் நேசித்த கடற்கரையிலேயே மரணம் அடைந்திருப்பது அவரது ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன