இலங்கை
கலால் திணைக்களத்திற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்த ஜனாதிபதி!

கலால் திணைக்களத்திற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்த ஜனாதிபதி!
கலால் திணைக்களத்திற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கலால் திணைக்கள அதிகாரிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று (05.12) இடம்பெற்ற சந்திப்பில் முக்கிய கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போதே ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டத்திற்கு எதிராகச் செயற்படக் கூடாது எனவும், சட்டத்தை எப்போதும் அமுல்படுத்துவது அத்தியாவசியமானது எனவும் தெரிவித்த ஜனாதிபதி கலால் அனுமதி வழங்குவதில் முறையான முறைமையை பின்பற்றுமாறு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் சரியான நேரத்தில் வரி வசூல் செய்வதற்கான நடவடிக்கைகள், வற் வரி வசூலிப்பதில் உள்ள சிரமங்கள் மற்றும் அங்கு ஏற்படும் முறைகேடுகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.