Connect with us

இந்தியா

குழந்தை திருமணத்தை எதிர்த்த ரமணாம்மா இன்று ஒரு IT ஊழியர்…!!

Published

on

குழந்தை திருமணத்தை எதிர்த்த ராமம்மா

Loading

குழந்தை திருமணத்தை எதிர்த்த ரமணாம்மா இன்று ஒரு IT ஊழியர்…!!

குழந்தை திருமணத்தை எதிர்த்த ராமம்மா

Advertisement

ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள குஞ்சாலா குருமாயாபேட்டா என்ற கிராமத்தில் தினசரி கூலி தொழிலாளிகளுக்கு பிறந்தவர் ரமணாம்மா. மூன்று பெண் பிள்ளைகளுக்கு பெற்றோர் என்பதால் மூத்த மகளான ரமணாம்மாவை, அவர் 18 வயதை அடைவதற்கு முன்பே திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். இது அவர்களுடைய பொருளாதார சுமையை குறைப்பதற்கு உதவும் என்று அவர்கள் நம்பினர். எனினும் 14 வயதில் ரமணாம்மா துணிச்சலாக தனக்கு திருமணம் வேண்டாம் என்று எதிர்த்தார். இதுவே அவருடைய வாழ்க்கையை மிகப்பெரிய அளவில் மாற்றிவிட்டது.

தன்னுடைய பெற்றோர்கள் எடுத்த முடிவை உறுதியாக நிராகரித்த ரமணாம்மா குழந்தைகள் நல அமைப்பின் உதவியை நாடினார். அவர்களுடைய உதவியோடு திருமணத்திற்கு எதிராக ஒரு புகாரையும் அவர் பதிவு செய்தார். மேலும் தன்னுடைய படிப்பை தொடர்வதற்கு கஸ்தூரி பாய் காந்தி பெண்கள் பள்ளியில் சேர்ந்தார். கல்வி மூலமாக ஆளுமை பெறுவதற்கான அவருடைய பயணத்திற்கான துவக்கமாக இது அமைந்தது.

ரமணாம்மா நன்றாக படிக்கக் கூடியவர். சிறந்த மதிப்பெண்கள் உடன் தன்னுடைய பத்தாம் வகுப்பை முடித்து தன்னுடைய பெற்றோர்களின் அனுமதியுடன் நுசிவீடு IITல் அட்மிஷன் பெற்றார். அங்கு அவர் B. Tech கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்தார். நல்ல மதிப்பெண்களை பெற்றதால் அரசு செலவில்லையே தன்னுடைய கல்வியை மேற்கொண்டார். இதனால் கல்விக்காக அதிக அளவு செலவு செய்வதை தவிர்த்து, தன்னுடைய குடும்பத்திற்கு வலுவான பொருளாதார தூணாகவும் மாறினார்.

Advertisement

தற்போது வீட்டிலிருந்தபடியே IT ப்ரொபஷனலாக பணிபுரிந்து வரும் ரமணாம்மா UPSC சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தன்னை தயார்ப்படுத்திக் கொண்டு வருகிறார். இவருடைய இந்த இலக்கை அடைவதற்கு தேவையான பொருளாதார உதவியை உள்ளூர் MLA  மற்றும் கலெக்டர் ஸ்வப்னில் தின்கர் பூந்துக்கரிடம் பெற்று வருகிறார். அவர்களுடைய ஆதரவுடன் தன்னுடைய கனவை நிறைவேற்றிக் கொள்வதற்கான படிகளை எடுத்து வருகிறார் ரமணாம்மா.

இவருடைய இந்த பயணம் உலகமெங்கும் உள்ள இளம் பெண்களுக்கு வலிமையான ஊக்குவிப்பாக அமைகிறது. இவருடைய மன உறுதியும், விடாமுயற்சியும் சமூகம் மற்றும் குடும்பத்தார் கொடுத்த அழுத்தத்தை தகர்த்தெறிந்து, கல்வியை ஆயுதமாக பயன்படுத்த உதவியது. சமீபத்தில் இவர் “பால் விவா முக்து பாரத்” என்ற செமினாரில் வெர்ச்சுவலாக பங்கேற்று தன்னுடைய வெற்றி கதையை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டு, குழந்தை திருமணத்திற்கு எதிராக தன்னுடைய கருத்தை பதிவு செய்தார்.

Advertisement

ஸ்ரீகாக்குளம் அதிகாரிகள் ரமணாம்மாவின் இந்த வெற்றி கதையை பள்ளிகளில் கவுன்சிலிங் செஷன்களை நடத்துவதன் மூலமாக குழந்தை திருமணத்தை தடுப்பதற்கு முயற்சி எடுத்து வருகின்றனர். ஒரு தனி நபரின் சமூகம் மீதான தாக்கத்திற்கு ஒரு உயிருள்ள உதாரணமாக ரமணாம்மாவின் இந்த கதை அமைகிறது. அவருடைய துணிச்சல், மன உறுதி மற்றும் விடாமுயற்சி ஆகியவை பல்வேறு தடங்கல்களை தாண்டி தங்களுடைய கனவுகளை துரத்திக் கொண்டு பயணிக்கும் இளம் பெண்களுக்கு சிறந்த ஊக்கமாக இருக்கிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன