சினிமா
‘கூலி’ படத்தில் இணையும் ‘பிகில்’ பட நடிகை..! யார் அந்த நடிகை தெரியுமா?

‘கூலி’ படத்தில் இணையும் ‘பிகில்’ பட நடிகை..! யார் அந்த நடிகை தெரியுமா?
நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றது. இந்நிலையில் இப்படத்தில் பிகில் படத்தின் நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். மேலும் பாலிவுட் நடிகர் அமீர்கான் இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்த திரைப்படம் தற்போது எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த மாதம் இறுதிக்குள் படத்தை முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்ஷன் பணியில் கவனம் செலுத்த இருக்கின்றார் கூலி படக்குழு. இந்த திரைப்படம் வரும் மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் நடித்திருந்தவர் தான் ரெபா மோனிகா ஜான். படத்தில் ஆசிட் வீசப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்திருந்தார். இவரின் நடிப்பு ரசிகர்கள் கவர்ந்தது.”மழையில் நனைகிறேன்” என்கின்ற திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தபோது இந்த தகவலை அவர் உறுதி செய்திருந்தார். இப்படி பான் இந்தியாவை சேர்ந்த அனைத்து நடிகர்களையும் ஒரே திரைப்படத்தில் இறக்கி இருக்கின்றார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அப்படி என்ன செய்ய போகிறார் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.