இந்தியா
டாப் 10 நியூஸ்: மகாராஷ்டிரா முதல்வர் பதவியேற்பு விழா முதல் ‘புஷ்பா 2’ ரிலீஸ் வரை!

டாப் 10 நியூஸ்: மகாராஷ்டிரா முதல்வர் பதவியேற்பு விழா முதல் ‘புஷ்பா 2’ ரிலீஸ் வரை!
மகாராஷ்டிரா மாநில முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் இன்று (டிசம்பர் 5) பதவியேற்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8-ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்துகிறார்.
கார்த்திகை சுபமுகூர்த்த நாளை ஒட்டி, இன்று சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்தனர்.
சுகுமாரன் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ஃபகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்துள்ள புஷ்பா 2 படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
ஃபெஞ்சல் புயலால் கடுமையாக பாதிப்புக்குள்ளான விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடந்து வருவதால், இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வே – பாகிஸ்தான் அணிகள் மோதும் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள குயின்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.23-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.81-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பள்ளி கல்வித்துறை சார்பில் இன்றும் நாளையும் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் நடைபெற இருந்த கலைநிகழ்ச்சி போட்டிகள் வரும் ஜனவரி மாதம் 3,4 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிச்சன் கீர்த்தனா: கொள்ளு இட்லி
அமைச்சரை சந்தித்த தயாரிப்பாளர்கள்: ஏன்?