இந்தியா
தமிழக அரசில் மேலும் முக்கியத்துவம்.. உதயநிதிக்கு புதிய பொறுப்பு அளித்த முதலமைச்சர்!

தமிழக அரசில் மேலும் முக்கியத்துவம்.. உதயநிதிக்கு புதிய பொறுப்பு அளித்த முதலமைச்சர்!
மாநிலத்தின் முழுமையான வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் மாநில அரசுக்கு துணை நிற்பது மாநில திட்டக் கமிஷனின் பணியாகும். திட்டக் கமிஷனின் தலைவராக மாநில முதலமைச்சரே இருப்பது வழக்கம். அவ்வகையில் மாநில திட்டக் கமிஷனின் தலைவராக முதலமைச்சர் ஸ்டாலின் இருந்து வருகிறார். திட்டக் கமிஷனின் துணைத் தலைவராக பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில், தமிழக துணை முதலமைச்சராக உதயநிதி பொறுப்பேற்றுள்ள நிலையில், மாநில திட்டக் கமிஷன் துணைத் தலைவராக உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. அதே நேரத்தில் துணைத் தலைவராக இருந்த ஜெயரஞ்சன், செயல் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுபோல், உறுப்பினராக தலைமைச் செயலாளர் முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர இரு முழு நேர உறுப்பினர்களும், 7 பகுதி நேர உறுப்பினர்களும் உள்ளனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திட்டம் மற்றும் மேம்பாட்டுத் துறை பொறுப்பை வகித்ததால், அவர் திட்டக் கமிஷனின் துணைத் தலைவராக நியமிக்கப்படக் காரணம் எனத் தெரிகிறது.