சினிமா
திரிஷாவுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி புலம்புகிறார்? குழப்பத்தில் ரசிகர்கள்…

திரிஷாவுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி புலம்புகிறார்? குழப்பத்தில் ரசிகர்கள்…
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா பல முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது ஜப்பானுக்கு சென்றுள்ள நடிகை திரிஷா அங்கு எடுத்த புகைப்படங்களை எடுத்து பகிர்ந்து வந்தார். தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கும் சூர்யா 45வது படத்தின் ஷூட்டிங்கிற்காக கோயப்பூத்தூரில் சமீபத்தில் கலந்துள்ளார்.சமீபத்தில், ஒருமுறை புத்திசாலி ஒருவர் என்னிடம் உன்னை மனமுடைய செய்தவர் அவர்தான் என தெரிந்தும் அவருடன் நெருக்கமாகவும் நட்புடனும் பழகும் ஒருவருடன் எந்தக்காலத்திலும் பழகக்கூடாது என்று கூறியிருந்தார்.தற்போது, உங்களுக்கு ஒருநாள் லீவ் கிடைத்தது என்றால் அதை யாரிடமும் சொல்லாதீர்கள்.. ஒருவரிடம்கூட சொல்லாதீர்கள் என்று குறிப்பிட்ட்யுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அப்படி லீவ் கிடைத்து, யாரிடமாவது சொல்லி சிக்கலில் சிக்கினாரா? யார் அவர் என்னதான் ஆகிவிட்டது என்று கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.