சினிமா
நடிகர் சிவராஜ்குமாருக்கு ஏற்பட்ட அந்த நோய்… அமெரிக்கா சென்ற பின்னணி!

நடிகர் சிவராஜ்குமாருக்கு ஏற்பட்ட அந்த நோய்… அமெரிக்கா சென்ற பின்னணி!
கன்னடப் படவுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரும் பவர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவருமான புனித் ராஜ்குமார் மாரடைப்பால் கடந்த 2021 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
ராஜ்குமார் குடும்பத்தில் நடந்த இந்த இறப்பு திரையுலகை கலங்கடித்தது. புனித் போலவே அவரது மூத்த சகோதரரான சிவராஜ்குமாரும் கன்னட திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வருகிறார். இவர், ரஜினியின் ஜெயிலர் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்து இருந்தார்.
தனுஷ் உடன் கேப்டன் மில்லர் படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் சிவராஜ்குமார் தன்னை பாதித்த நோய் குறித்த சரியான விவரங்களைக் குறிப்பிடாமல், ‘நான் ஒரு மனிதன். எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை எடுத்து வருகிறேன். இரண்டு கட்ட சிகிச்சைகளை முடித்துவிட்டேன், இன்னும் இரண்டு கட்ட சிகிச்சை பாக்கி உள்ளது. இந்தியாவிலோ அல்லது அமெரிக்காவிலோ அறுவை சிகிச்சை செய்து கொள்வேன்” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அவரின் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. கடந்த ஆறு மாதங்களாக இந்தியாவிலேயே சிகிச்சை பெற்ற அவர், அறுவை சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிவராஜ்குமார் விரைவில் குணமாகி நாடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
நடிகர் சிவராஜ்குமார் மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் முதல் மகன் ஆவார். தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். சென்னை பல்கலையில் பட்டம் பெற்றவர். சென்னை திரைப்பட கல்லூரியில் படித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளர் ஆதித்யனை நினைவூட்டும் ‘ரோஜா மலரே’ பாடல்கள்!
குளிர்ந்த நீரில் ஊற வச்சா சாதமாக மாறும் ‘மேஜிக்’ அரிசி… என்ன நடக்கும்?