சினிமா
நடு ராத்திரியில் காவு வாங்கிய புஷ்பா 2.. நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்.. ICU-வில் மகன்..

நடு ராத்திரியில் காவு வாங்கிய புஷ்பா 2.. நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்.. ICU-வில் மகன்..
தமிழில் கடந்த ஆண்டு பெங்கல் பண்டிகைக்கு விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு படம் ஒரே நாளில் வெளியானதில் படத்தை காண ஆட்டம் பாட்டத்துடன் லாரியில் வந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. அதே போல் தற்போதும் ஒரு சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது.நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபக்த் பாசில் உள்ளிட்ட பல நடித்து இன்று ரிலீஸாகியுள்ள படம் தான் புஷ்பா 2. படத்தை பார்த்த பலரும் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் புஷ்பா 2 படத்தின் பிரமீயர் காட்சி நேற்று இரவு ஹைதராபாத்தில் உள்ள பிரபல திரையரங்கில் ஒளிப்பரப்பப்பட்டது.அந்த தியேட்டருக்கு அல்லு அர்ஜுன் வந்து ரசிகர்களுடன் படம் பார்த்திருக்கிறார். அதன் காரணமாக அங்கு, அப்போது கூட்டம் அதிகமானதால் போலிசார் லத்தி சார்ஜ் நடத்தியும் கூட்டலை சரிசெய்யமுடியவில்லை.அதனால் 39 வயதுள்ள பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். மேலும் உயிரிழந்த பெண்மணியின் மகன் பரிதாபகரமான நிலையில், ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் தற்போது டோலிவுட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.