Connect with us

இலங்கை

பார் அனுமதிப்பத்திர விபரங்கள் பாராளுமன்றத்தில் அம்பலம்!

Published

on

Loading

பார் அனுமதிப்பத்திர விபரங்கள் பாராளுமன்றத்தில் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் அரசியல் இலஞ்சமாக வடக்கு மாகாணத்திற்கு 32 மதுபானசாலைகளுக்கான அனுமதிபத்திரமும், கிழக்கு மாகாணத்திற்கு 22 மதுபானசாலை அனுமதி பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன. 

அத்துடன் நாடளாவிய ரீதியில் 361 மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்து, குறித்த விபரங்களை சபைக்கு சமர்ப்பித்தார்.

Advertisement

 பாராளுமன்றத்தில் புதன்கிழமை (4) நடைபெற்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் மீதான உரையின் போது அனுமதி பத்திரம் தொடர்பான ஆவணங்களை சபைக்கு சமர்ப்பித்து, வருமாறு உரையாற்றினார்.

கடந்த அரசாங்கம் அரசியல் இலஞ்சமாக பலருக்கு மதுபான சாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

அவற்றை வெளியிடுவதாக கூறியிருந்தோம்.அதற்கமைய அந்த விபரங்களை சபைக்கு சமர்ப்பிக்கின்றேன். இதனை சகலரும் அறிந்து கொள்ள முடியும்

Advertisement

இந்த ஆவணத்தின்படி மேல் மாகாணத்தில் 110 மதுபானசாலைகளுக்கான அனுமதிகளும், தென்மாகாணத்தில் 48,வடக்கு மாகாணத்தில் 32, கிழக்கு மாகாணத்தில் 22, மத்திய மாகாணத்தில் 45,வட மத்திய மாகாணத்தில் 14, ஊவா மாகாணத்தில் 30, வடமேல் மாகாணத்தில் 30 சப்ரகமுவ மாகாணத்தில் 30 அனுமதி பத்திரங்கள் என்ற அடிப்படையில் 9 மாகாணங்களுக்கும் மொத்தமாக 361 மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்டுள்ளன.

 அதேபோன்று சில்லறை மதுபான விற்பனைக்கான அனுமதிகளாக கொழும்பு 2, கம்பஹா 8, களுத்துறை 8, காலி 9,மாத்தறை 5,அம்பாந்தோட்டை 5, யாழ்ப்பாணம் 5, கிளிநொச்சி 16, வவுனியா2, மன்னார் 2, திருகோணமலை 4, மட்டக்களப்பு 1, அம்பாறை , கண்டி 11, மாத்தளை 6, நுவரெலியா 8, அனுராதபுரம் 4, பொலநறுவை 3. புத்தளம் 6, குருநாகல் 8 . பதுளை 9, மொனராகலை 7, இரத்தினபுரி 6, கேகாலை 2 என்ற அடிப்படையில் மொத்தமாக 172 அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளன. 

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு அனுமதி பத்திரம் ஏதும் வழங்கப்படவில்லை.

Advertisement

2024 ஜனவரி முதல் இவ்வாறு அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. கட்சி தாவலுக்காக அரசியல் இலஞ்சமாகவே மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

இதன் பின்னரே அனுமதி பத்திரங்களை பெற்றுக் கொண்டவர்களின் பெயர்கள் பார் குமார் என்று பல வடிவங்களில் மாற்றப்பட்டன. குறித்த விபரங்களை நாட்டு மக்களும் இனி தெரிந்துக் கொள்ளலாம் என்றார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன