Connect with us

சினிமா

பிரபல இயக்குனர் வீட்டில் நிகழ்ந்த திடீர் உயிரிழப்பு.. கதறித் துடிக்கும் திரையுலகினர்

Published

on

Loading

பிரபல இயக்குனர் வீட்டில் நிகழ்ந்த திடீர் உயிரிழப்பு.. கதறித் துடிக்கும் திரையுலகினர்

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக காணப்படுபவர் தான் இயக்குனர் கே. எஸ் ரவிக்குமார். 90ம் ஆண்டு காலங்களில் இவர் கொடுத்த பல கமர்சியல் படங்கள் ரசிகர்களின் மனம் கவர்ந்த படங்களாகத்தான் இருக்கும்.1990 ஆம் ஆண்டு புரியாத புதிர் என்ற படத்தில் ஆரம்பித்து அதன் பின்பு முன்னணி நடிகர்களாக காணப்பட்ட கமலஹாசன், ரஜினிகாந்த், சரத்குமார் என பல ஹீரோக்களை வைத்து சூப்பர் படங்களை இயக்கி இருந்தார்.d_i_aஇவர் இயக்கிய படங்களில் முத்து, அவ்வை சண்முகி, நாட்டாமை, பிஸ்தா, படையப்பா, நட்புக்காக, தெனாலி, மின்சார கண்ணா, பஞ்சதந்திரம், வரலாறு, தசாவதாரம் என்று பல ஹிட் படங்கள் காணப்படுகின்றன. தற்போது இவர் இயக்குனராக மட்டுமில்லாமல் தான் இயக்கும் படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் என்றாலும் நடிக்கும் ஒருவராக காணப்படுகின்றார்.இந்த நிலையில், கே. எஸ் ரவிக்குமாரின் தாயார் ருக்மணி அம்மாள் நேற்று மாலை உயிரிழந்துள்ளார். இந்த தகவலை ரவிக்குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இதை அறிந்த பலரும் ரவிக்குமாருக்கு ஆறுதல் சொன்னதோடு அவருடைய தாயாருக்கு தமது இரங்கலையும் தெரிவித்து வருகின்றார்கள்.ருக்மணி அம்மாவுக்கு 88 வயதாகும் நிலையில், அவர் வயது மூப்பின் காரணமாகவே உயிர் இழந்துள்ளார் என கூறப்படுகின்றது. தற்போது அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள். மேலும் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு அவருடைய இறுதிக் கிரியைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன