சினிமா
புஷ்பா 2க்கு ஓவர் பில்டப்.. முட்டு கொடுக்கும் தெலுங்கு ரசிகர்கள்? படம் எப்படி?

புஷ்பா 2க்கு ஓவர் பில்டப்.. முட்டு கொடுக்கும் தெலுங்கு ரசிகர்கள்? படம் எப்படி?
தென்னிந்திய சினிமாவில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் புஷ்பா 2. இந்த படத்தை ப்ரீமியர் காட்சிகளில் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் கொண்டாடி வருகின்றார்கள். இந்த படம் தொடர்பான விமர்சனங்கள் தான் இணையத்தை கவர்ந்துள்ளன.அதன்படி பாலிவுட்டின் பிரபல விமர்சகரான தரன், புஷ்பா 2 படத்தை பார்த்துவிட்டு இந்த படம் மெகா ப்ளாக் பாஸ்டர் என தனது விமர்சனத்தை கொடுத்துள்ளார். மேலும் இந்த படம் எந்த இடத்திலும் குறை இல்லாமல் தர மானதாக தெறிக்குது எனவும் தெரிவித்துள்ளார்.மேலும் அல்லு அர்ஜுன் தனது ரசிகர்களை கொஞ்சமும் ஏமாற்றவில்லை என பலரும் தமது பாசிட்டி விமர்சனங்களை முன் வைத்து வருகின்றார்கள். அது மட்டும் இன்றி இந்தியாவின் அனைத்து சினிமா விருதுகளுக்கும் அல்லு அர்ஜுன் தகுதியானவர் என தெரிவித்துள்ளார்கள்.அதே வேளை புஷ்பா 2க்கு ஓவராக பில்டப் கொடுத்த நிலையில் இந்த படத்தின் முதல் காட்சியிலேயே நிறைய குறைகள் இருப்பதாகவும் இரண்டாவது பாதியில் குடும்ப செண்டிமெண்ட் காட்சி என்று அறுத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளதோடு இந்த படத்திற்கு தெலுங்கு ரசிகர் தான் அதிக முட்டு கொடுத்து வருவதாகவும் விமர்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.அது மட்டும் இல்லாமல் இந்தியாவிலேயே திறமையான நடிகராக இருக்கும் பகத் பாஸில் தனது வாழ்க்கையிலே நடித்த மோசமான படம் என்றால் புஷ்பா 2 தான் என தெரிவித்துள்ளதோடு இரண்டாவது பாகத்தில் அவரது கேரக்டரை மொத்தமாகவே சொதப்பி விட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள். தற்போது கலவையான விமர்சனத்தை பெற்று வரும் புஷ்பா 2 திரைப்படம் வசூலில் சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.