இந்தியா
மேடையில் உயிருடன் பன்றியைக் கொன்று பச்சை இறைச்சியை சாப்பிட்ட நடிகர்… அதிரடி கைது!

மேடையில் உயிருடன் பன்றியைக் கொன்று பச்சை இறைச்சியை சாப்பிட்ட நடிகர்… அதிரடி கைது!
ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் ரலாப் கிராமத்தில் அண்மையில் திருவிழா நடந்துள்ளது. திருவிழாவையொட்டி கிராமத்தில் மேடை நாடகம் நடத்தப்பட்டது. இதில் பேய் வேடத்தில் நடித்த நடிகருக்கு கதைப்படி பன்றியை கொன்று அதை சாப்பிடும் படி காட்சியிருந்தது. இந்த காட்சியில் நடித்த 45 வயது நடிகர் காட்சி தத்ரூபமாக இருக்க வேண்டும் என எண்ணி உண்மையாகவே உயிருடன் இருந்து பன்றியை கொன்று, அதன் வயிற்றை கிழித்து பச்சை இறைச்சியை சாப்பிட்டுள்ளார். அத்துடன் உயிருடன் இருந்த பாம்புகளும் மேடையில் நாடகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நாடகத்தின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, இந்த சம்பவம் ஒடிசா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கண்டனங்களும் வலுத்தன. ஆளும் பாஜக கடும் எதிர்வினையை வெளிப்படுத்தியது.
இந்த சம்பவத்துக்கு ஒடிசா சட்டசபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் விலங்கு நல ஆர்வலர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பன்றியை கொன்று பச்சை இறைச்சியை சாப்பிட்ட நடிகரும், நாடக அமைப்பாளரும் கைது செய்யப்பட்டனர். விலங்குகளைக் கொடுமைப்படுத்துதல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை மீறியதாக கூறி கைது செய்யப்பட்டனர்.
அதேபோல், மேடையில் பாம்புகளை பயன்படுத்தியவரை போலீசார் தேடி வருவதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.