இலங்கை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
நாட்டின் ஒரு சில பகுதிகளில் மாத்திரம் மழையுடன் கூடிய வானிலை பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
இதன்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, குருநாகல், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மற்ற பகுதிகளில் முக்கியமாக மழை இல்லாத வானிலை உள்ளது.