சினிமா
Pushpa 2: The Rule Review | எப்படி இருக்கிறது அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’? விமர்சனம் இதோ..!

Pushpa 2: The Rule Review | எப்படி இருக்கிறது அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’? விமர்சனம் இதோ..!
புஷ்பா 2: தி ரூல் திரைப்படத்தின் ட்ரெய்லரை பார்த்தபோதே உங்களுக்கு விறுவிறுப்பாக தேன்றியிருந்தால், நீங்கள் நிச்சயம் புஷ்பா 2 திரைப்படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும். படத்தின் முதல் காட்சியிலிருந்தே ரசிகர்களுக்கு ஏற்ற மாஸ் காட்சியிலிருந்து தொடங்கும் இத்திரைப்படம், அல்லு அர்ஜுனை இந்த ஆண்டின் மாஸான நட்சத்திரமாக நிலைநிறுத்துகிறது. சுகுமாரின் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் மற்றும் ஃபஹத் பாசில் என்ற சக்திவாய்ந்த நடிப்பாளர்கள் இணைந்து ஒரு மாபெரும் வெற்றியை வழங்கி, ரசிகர்களை ஒவ்வொரு காட்சிக்கும் கைதட்ட வைக்கிறது.
திரைக்கதை சுவாரஸ்யமாக அமைந்துள்ளதே இந்த படத்தின் அடையாளமாக அமைந்துள்ளது. அதைவிட சிறப்பாக இருப்பது படத்தில் வரும் பஞ்ச் வசனங்கள். அல்லு அர்ஜுனின் ஸ்டைல் மற்றும் திரை நடிப்பில் காணப்படும் தனித்துவம், புஷ்பராஜ் கதாபாத்திரத்தில் அவரது நுணுக்கத்தை கூட்டுகிறது. சுகுமார், இந்த காட்சிகளின் ஒவ்வொரு பரிமாணத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். சித்தூரின் கிராமப்புற வாழ்வின் சீரழிந்த சூழல், மற்றும் செம்மரம் கடத்தலின் சர்வதேச அளவிலான வளர்ச்சியை, பிரம்மிப்பூட்டும் வகையில் மிக நேர்த்தியாக காட்டுகிறார். அல்லு அர்ஜுனின் ஒவ்வொரு ஸ்லோ-மோஷன் நடையிலும் ரசிகர்களின் விசில் பறக்கின்றன.
அல்லு அர்ஜுனுடன் மட்டுப்படுத்தாமல், ஃபஹத் பாசில் தனது வழக்கமான உச்ச நடிப்பில் கவனத்தை கவருகிறார். SP ஷேகாவத் எனும் காவல் அதிகாரியாக அவரது கதாபாத்திரம் விறுவிறுப்பாக, சில சமயங்களில் சைக்கோ போல சித்தரிக்கப்படுகிறது. இவருக்கும் புஷ்பாவுக்கும் இடையிலான மோதல்கள், திரைக்கதைக்கு அடிநாதமாக அமைந்துள்ளன.
ஸ்ரீவல்லியாக ரஷ்மிகா மந்தனா: தனது உறுதியான கதாபாத்திரத்துடன் அசத்துகிறார். சமூக கட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்து, தனது தன்னம்பிக்கையான நடிப்பால், பல இடங்களிலும், சண்டைக் காட்சிகளிலும் அசத்துகிறார். அல்லு அர்ஜுனுடன் அவரின் செமிஸ்ட்ரி, படத்தின் சிறப்பம்சமாக அமைகிறது.
படம் எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் அதிரடிப் திரைக்கதையால் நிரம்பியிருக்கிறது. அதில் புஷ்பா ஒரு புடவையில் ஆடும் காட்சி தனித்துவமாகத் திகழ்கிறது. அவ்வப்போது அல்லு அர்ஜுனின் சீன்கள் ரசிகர்களின் விசில் காட்சிகளாலேயே நிரம்பி இருக்கிறது.
புஷ்பா 2: தி ரூல் ஒரு கச்சிதமான, ரசிகர்களுக்கேற்ற விருந்தாக அமைந்துள்ளது. மாஸ் நிறைந்த காட்சிகள், கற்பனை கேரக்டர்களில் அவர்களது நடிப்புகள் மற்றும் பரபரப்பான திரைக்கதை என, 2024-ஆம் ஆண்டின் மிகச் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது புஷ்பா 2.. அல்லு அர்ஜுனின் இந்த மாஸ் திரைப்படத்தை நிச்சயம் திரையில் காண தவறாதீர்கள்!