Connect with us

சினிமா

அதிகாலை காட்சிக்கு தடை.. புஷ்பா 2 படத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு, தெலுங்கானாவில் அதிரடி

Published

on

Loading

அதிகாலை காட்சிக்கு தடை.. புஷ்பா 2 படத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு, தெலுங்கானாவில் அதிரடி

நடிப்பில் நேற்று வெளியானது. படம் வெளிவருவதற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

அதனாலேயே நேற்று படத்தை காண ரசிகர்களின் கூட்டம் தியேட்டரில் அலை மோதியது. அதேபோல் இரவு 10:30 மணிக்கு சிறப்பு காட்சி ரசிகர்களுக்காக திரையிடப்பட்டது.

Advertisement

அது மட்டும் இன்றி அதை ரசிகர்களுடன் காண அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்தார். அதுதான் மிகப்பெரும் சம்பவத்திற்கு காரணமாக அமைந்துவிட்டது.

அவரை காண்பதற்காக ரசிகர்கள் கூடிய நிலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அந்த இடிபாடுகளில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்துள்ளது கடும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

இது விமர்சனமான நிலையில் தற்போது தெலுங்கானா அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி தெலுங்கானாவில் சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளனர்.

Advertisement

அம்மாநில அமைச்சர் கோமதி ரெட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இப்படித்தான் தமிழ்நாட்டிலும் படத்தின் ரிலீஸ் போது உ உயில் இழப்பு ஏற்பட்டது.

படத்தை காண வந்த ரசிகர் லாரி மீது ஏறி ஆடும் போது தவறி விழுந்து பலியானார். அதன் பிறகு தமிழக அரசு இனி அதிகாலை காட்சிக்கு அனுமதி கிடையாது. காலை 9:00 மணிக்கு தான் முதல் காட்சி தொடங்கும் என அறிவித்தது.

ஆனால் மற்ற மாநிலங்களில் நள்ளிரவு காட்சி அதிகாலை காட்சி என சிறப்பு காட்சிகள் நடந்தது. தற்போது ஏற்பட்ட உயிரிழப்பால் தெலுங்கானா மாநிலமும் தமிழ்நாடு போல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன