Connect with us

இலங்கை

ஒரு வாக்கால் அரசமைப்பு பேரவைக்கான வாய்ப்பை இழந்த ஜீவன்

Published

on

Loading

ஒரு வாக்கால் அரசமைப்பு பேரவைக்கான வாய்ப்பை இழந்த ஜீவன்

அரசியல் அமைப்பின் பேரவைக்கான எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிக்கான தேர்தலில் சிவஞானம் சிறிதரனுக்கு கயேந்திரகுமார் பொன்னம்பலம் ஆதரவு வழங்கியுள்ளார்.

சிவஞானம் சிறிதரனை கோடீஸ்வரன்  முன்மொழிய கயேந்திரகுமார் பொன்னம்பலம்  வழிமொழிந்து தனது வாக்கையும் சிறிதரன் அவர்களுக்கு வழங்கியுள்ளார்.

Advertisement

இந்த தேர்தலில் 10 உறுப்பினர்களின் ஆதரவுடன் சிவஞானம் சிறிதரன் எதிர்க்கட்சிகளின் அரசியல் பேரவையின் பிரதிநிதி ஆகியிருக்கிறார்.

கடந்த பாராளுமன்றத் தேர்தல் தமிழ்த்தேசியப்பரப்பில் சற்று சறுக்கல் மாதிரியான தோற்றத்தை வெளிப்படுத்தியிருந்ததும் ஓர் வகையில் நல்ல விடயம்தான்.
பாராளுமன்றில் தமிழர் தரப்பு கூட்டு வலிமை பெற வழிகோலியுள்ளது.

Advertisement

இத்த புரிந்துணர்வு பாராளுமன்றுக்கு வெளியேயும் தொடர வேண்டியது மிக முக்கியமானது.
தமிழ்த்தேசிய அரசியல் மீள் கட்டுமானத்திற்கான வலிமையான அத்திவாரமாக இந்த முயற்சி அமைகிறது.

இது மேலும் வலிமை வாய்ந்ததாக அமைவதற்கு குறித்த நபர்கர்கள் சார்ந்த அமைப்புகள் மற்றும் கட்சிகளின் கூட்டுமுயற்சியால் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும் .

காலத்தேவையை உணர்ந்து மாறுபட்ட கோணங்களில் எதிர் துருவங்களாக நின்ற இரு கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகளின் மிக முக்கிய பங்களிப்பாக இருப்பது சிறப்பானது.

Advertisement

இந்த இரு நபர்களின் பங்களிப்பாக மட்டுமல்லாது இன்னும் பாராளுமன்றுக்கு வெளியே உள்ள ஆற்றல் மிக்கோரது பங்களிப்பும் இருத்தல் சிறந்த பெறுபேற்றை கொடுக்கும்.

கடந்த கால கசப்புணர்வுகளை மறந்து
காலத்தின் தேவையை உணர்ந்து
தமிழர்தரப்பு ஒருமைப்பட்டு நிற்பதே காலத்தின் சிறந்த முடிவாகும் என சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிடப்பிட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன