இந்தியா
கார்த்திகை தீப திருவிழா… மதுரையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

கார்த்திகை தீப திருவிழா… மதுரையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சிறப்பு பஸ்கள்
பொதுவாகவே கார்த்திகை மாதம் வந்தாலே சிவன் கோவில்களில் பொது மக்களின் கூட்டம் என்பது அதிகமாக இருக்கும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 13-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை சென்று சாமி தரிசனம் செய்வதும், கிரிவலம் செல்வதும் வழக்கம்.
இதற்கிடையே, பக்தர்களின் வசதிக்காக, மதுரை கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கார்த்திகை தீப திருவிழாவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக மதுரை அரசு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார். அதன்படி, மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மண்டலங்களில் வழக்கமான பஸ்களுடன் சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.
இதற்காக வருகிற 12-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 300 சிறப்பு பஸ்கள் இயக்க தேவையான நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. திருவண்ணாமலைக்கு பக்தர்கள் சென்றுவர வசதியாக சிறப்பு பஸ்களுடன், கடைசி நேர கூட்ட நெரிசலை சமாளிக்க என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யவும், அரசு போக்குவரத்து கழக செல்போன் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதில் டீலக்ஸ் வகை பஸ்களுக்கான முன்பதிவும் செய்து கொள்ளலாம். பயணிகளின் பாதுகாப்பான பயணம், பயணிகளுக்கான வழிகாட்டுதல் மற்றும் சிறப்பு பஸ்கள் இயக்கத்தை கண்காணிக்க வசதிக்காக முக்கிய பஸ் நிலையங்களில் போக்குவரத்துக் கழக அலுவலர்கள், டிக்கெட் பரிசோதர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.