சினிமா
தனுஷ் போல் எகிறும் பகத் பாசில் மார்க்கெட்.. நாலா பக்கமும் பறக்கும் கோடி

தனுஷ் போல் எகிறும் பகத் பாசில் மார்க்கெட்.. நாலா பக்கமும் பறக்கும் கோடி
இப்போது திரையரங்குகளில் படம் வெளியான நிலையில் பகத் பாசிலின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கேற்றார் போல் படு பயங்கரமாக நடித்து வருகிறார்.
ஆரம்பத்தில் சினிமாவில் அங்கீகாரம் கிடைக்காமல் ஒதுங்கிய தரமான கம்பேக் மூலம் அடித்து நொறுக்கி வருகிறார். இந்த சூழலில் அவரது மார்க்கெட் எகிறும் படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அதாவது ஆரம்பத்தில் தனுஷையும் கேலி, கிண்டல் செய்த நிலையில் அவர் தமிழ், தெலுங்கு, பாலிவுட், ஹாலிவுட் என எல்லா மொழி படங்களிலும் நடித்து கலக்கி வருகிறார்.
இப்போது அதேபோல்தான் மலையாள சினிமா மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் கொடி கட்டி பறந்து வரும் பகத் பாசிலுக்கு பாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதாவது ராக் ஸ்டார், அமர்சிங் சம்கிலா ஆகிய படங்களை இயக்கிய இம்தியாஸ் அலி ஒரு படத்தை இயக்க உள்ளார்.
இந்த படத்தில் பகத் பாசில் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் அவருக்கு ஜோடியாக அனிமல் படத்தில் நடித்த திரிப்தி டிம்ரி நடிக்க உள்ளார்.
மேலும் பகத் பாசில் பாலிவுட்டில் என்ட்ரி கொடுப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து ஒரு பிசியான நடிகராக பகத் பாசில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.