சினிமா
நயன்தாராவை ஓரங்கட்டிய திரிஷா!! 2025 ஐ ஆளப்போகும் சௌத் குயின்..

நயன்தாராவை ஓரங்கட்டிய திரிஷா!! 2025 ஐ ஆளப்போகும் சௌத் குயின்..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக இருந்து 20 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாத்துறையில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்து வருகிறார் நடிகை திரிஷா. இடையில் சில தனிப்பட்ட பிரச்சனைகளை சந்தித்த திரிஷா, அதையெல்லாம் தாண்டி தற்போது மீண்டும் தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்தி இருக்கிறார்.தற்போது அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களிலும், தக் லைஃப், விஸ்வரம்பரா, சல்மான் கான் படம் போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். சமீபத்தில் சூர்யா45 படத்தில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் கமிட்டாகி ஷூட்டிங்கில் கலந்து கொண்டு வருகிறார்.இந்நிலையில் கோலிவுட் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியளில் நயன் தாரா 10 கோடி சம்பளத்துடன் முதல் இடத்தில் இருந்தார். அவரை ஓரங்கட்டி திரிஷா முதல் இடத்தினை தற்போது பிடித்திருக்கிறார்.அதாவது தக் லைஃப் படத்திற்காக திரிஷா 12 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டதால் டாப் கோலிவுட் நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார் திரிஷா.41 வயதாகும் திரிஷா நடித்து வரும் பல படங்கள் அடுத்தாண்டு தான் ரிலீஸ் ஆகவுள்ளன. அப்படி 2025 ல் வரிசையாக திரிஷா நடித்துள்ள படங்கள் ரிலீஸாவதால் திரிஷாவின் கெரியர் உச்சத்தில் தொட்டுள்ளது.