சினிமா
பாலிவுட்டில் இனி நம்ம ஆட்சிதான்! புஷ்பா-2 முதல் நாள் வசூலில் சரிந்தார் ஷாருக்கான்!

பாலிவுட்டில் இனி நம்ம ஆட்சிதான்! புஷ்பா-2 முதல் நாள் வசூலில் சரிந்தார் ஷாருக்கான்!
பான் இந்தியா திரைப்படமாக வெளியான புஷ்பா-2 திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. பிரபல நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் ஆகியோரின் அபாரமான நடிப்பில் இந்த திரைப்படம் பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் படு மாஸாக ரிலீசாகி வசூலில் கல்லாக்கட்டி வருகிறது. ஏற்கனவே பல சாதனைகளை புரிந்துவரும் புஷ்பா-2 திரைப்படம் ரிலீசாகி முதல் நாளே உலகளவில் ரூ. 275 கோடி வசூல் செய்துள்ளது. இதுவரையில் எந்த திரைப்படமும் முதல் நாளிலே இவ்வளவு கோடி வசூல் செய்தது இல்லை இதுவே முதல் தடவை. இதனை தாண்டிபாலிவுட்டில் ரூ. 65 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. பாலிவுட்டிலும் முதல் நாள் அதிக வசூல் செய்த படமாக புஷ்பா 2 சாதனை படைத்துள்ளது.இதுவரையில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படமே முதல் நாளில் 63 கோடி வசூல் செய்து முதலிடத்தில் இருந்தது. தற்போது அந்த பெருமையை புஷ்பா அலேக்காக தூக்கியுள்ளது. இனி வரும் நாட்களில் இதனை விட அதிக வசூல் செய்யும் என எதிர்பார்க்கபடுகிறது.